உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த திமுகவினரிடம் நேர்காணல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த திமுகவினரிடம் நேர்காணல்
X

பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது

பெரம்பலூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த 100 தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர், லெப்பைக்குடிக்காடு ஆகிய 4 பேரூராட்சிகள், பெரம்பலூர் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கடந்த வாரம் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தி.மு.க.வினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் பெரம்பலூர் நகராட்சி ஆகியவற்றிற்கு தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்திருந்த 100 பேரிடம் நேர்காணல் நிகழ்ச்சி பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஜனவரி 4ம் தேதி இன்று, திமுக மாவட்ட செயலாளரும் - மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் தனி, தனியே, நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதன் கட்சியில் வரைமுறைகள் மற்றும் வேட்பாளர் வெற்றிக்கான குறிப்புகள் கேட்டு விளக்கவுரை அளிக்கப்பட்டது,

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீசன், அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் சேகர்,

குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!