நாரணமங்கலம் கிராமத்தில் பெரிய ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு : நீரை பாதுகாக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் பெரிய ஏரிக்கு செல்லுமு் நீர்
நாரணமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரியில் உள்ள மதகு அடைக்கப்படாமல் உள்ளது.
இதனால் மழை நீர் முழுவதும் வீணாக வெளியேறிக்கொண்டுள்ளது. இந்த ஏரியில் தற்போதைய மழை நீர் முழுமையாக வீணாகாமல் சேமிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி உள்ளிட்ட 10 கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயம் மற்றும் பொதுமக்கள் வாழ்வாதாரமான குடிநீர் பஞ்சம் ஏற்படாது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடணடியாக மதகை அடைத்து தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி கிராம மக்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கூறியதையடுத்து,
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உடணடியாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகனிடம் தொலைபேசியில் உடணடியாக மதகை சரி செய்ய சொல்லி உத்தரவிட்டார். அதனடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மதகை சரி செய்து தண்ணீர் வீணாக செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தண்ணீர் வீணாக சென்றால் மணல் மூட்டைகள் கொண்டு சரி செய்யப்படும் என்றும் நீண்ட காலம் மதகு பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததால் தண்ணீர் வெளியேறுவதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.
நாரணமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் பத்மாவதி சந்திரன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், ஆட்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் நாரணமங்கலம் ஊராட்சி சார்பில் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu