சிறந்த காவல் நிலைய தேர்வுக்காக பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் ஐ.ஜி., ஆய்வு

சிறந்த காவல் நிலைய தேர்வுக்காக பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் ஐ.ஜி., ஆய்வு
X

பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ள ஐ.ஜி.

சிறந்த காவல் நிலைய தேர்வுக்காக பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் ஐ.ஜி., இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது . பொதுமக்களை வரவேற்பது, சுற்றுப்புறத்தை அழகுப்படுத்தி தூய்மையாக வைத்திருப்பது, வழக்குகளை விரைந்து முடிப்பது உள்ளிட்டவைகளுக்கு மதிப்பெண் கொடுத்து சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்படும். அந்த காவல் நிலையத்துக்கு முதலமைச்சர் விருது வழங்கவுள்ளார் .

இதில் கடந்த 2020 - ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பட்டியலில் உள்ள 3 காவல் நிலையங்களில் பெரம்பலூர் காவல் நிலையமும் இடம் பெற்றுள்ளது .

அந்த வகையில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து அக்டோபர் 26 ஆம் தேதியான இன்று ஐ.ஜி. பெரம்பலூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்து அதன் அறிக்கையை டி.ஜி.பி. அலுவலகத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!