பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உணவு பொட்டலம் வினியோகம்

பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உணவு பொட்டலம் வினியோகம்
X

பெரம்பலூரில் ஆதரவற்றோர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆதரவற்றோர், திருநங்கைகளுக்கு உணவு பொட்டலம் வினியோகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர் உத்தரவின் படியும் , இந்திய ஜனநாயக கட்சி தலைவர் இளைய வேந்தர் அறிவுறுத்தல் படியும் ஆதரவற்றோர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் , நான்கு ரோடு பகுதியில் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கும் ,திருநங்கைகளுக்கும்,அதனை தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டம் எறையூர் நரிக்குறவர் காலனி பகுதியில் நரிக்குறவ பொதுமக்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அன்பு துரை,ஐ.ஜே.கே. மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்,நகர தலைவர் ராமலிங்கம், ஒன்றிய தலைவர்கள் ரகுபதி , செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார், மற்றும் மனோகரன்,சூரிய குமார், சூரியசேகர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story