பெரம்பலூர்: வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு

பெரம்பலூர்: வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு
X

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி தனது மகள்களுடன் மனு கொடுப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மகள்களுடன் வந்து மனு கொடுத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூரைச்சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) மனைவி சங்கீதா.இவர்களுக்கு தமிழ்ச்செல்வி மற்றும் சர்மிளா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரன் வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த நவ 16ம் தேதி ராஜேந்திரன் உயிரிழந்து விட்டதாக உடன் பணிபுரியும் நண்பர்கள் மூலம் அவரது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

செய்வதறியாது தவித்த சங்கீதா தனது இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் மனு கொடுத்தனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை விரைவாக மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த ராஜேந்திரனின் மகள்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!