பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: ஒரே வார்டில் கணவன் - மனைவி போட்டி

பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: ஒரே வார்டில் கணவன் - மனைவி போட்டி
X

பெரம்பலூர் நகராட்சி 20வது வார்டு தேர்தலில் போட்டியிட கணவன் மனைவி வந்தனர்.

பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் ஒரே வார்டில் கணவன் - மனைவி போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. தி.மு.க.வில் 5 ஆண்டாக மாவட்ட நெசவாளர் அணி துணைஅமைப்பாளராக இருந்தவர் சுரேஷ். தற்போது தி.மு.க.வில் சீட் தராத காரணத்தினால் சுயேச்சையாக போட்டியிட முடிவு எடுத்தார்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி (சுரேஷ் - இளமதி) ஆகிய இருவரும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர், அதற்காக வேட்புமனு தாக்கல் இன்று செய்தனர்,

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!