நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி சாலை மறியல்

நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி சாலை மறியல்
X

குன்னம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி குன்னம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசு திட்டமான ஏரி வேலை திட்டத்தினை நடைமுறைப்படுத்த படுத்த கோரியும் அதில் வயலப்பாடி கிராமத்தில் ஊழல் நடப்பதாகவும் ஊழலை சரி செய்கோரியும் வயலப்பாடி கிராமத்தில் பொதுமக்களுக்கு நிரந்தரமாக மத்திய அரசு கொண்டுவந்த ஏரி வேலை திட்டத்தினை அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்குமாறு தி.மு.க. அரசை கண்டித்து பொதுமக்கள் இன்று அரசு பேருந்தை சுமார் 100க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெருமத்தூர் ஊராட்சியில் பெருமத்தூர் குடிக்காடு மற்றும் சிறுமத்தூர் ஊராட்சியில் முருக்கன்குடி ஆகிய கிராமங்களிலும் தங்கள் கிராமங்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க. அரசை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!