பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமை தின உறுதிமொழி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமை தின உறுதிமொழி
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா உறுதிமொழியினை வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் "இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும், வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்ற உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!