பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட  காவல் நிலையங்களில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
X

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் தினத்தையொட்டி உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இன்று டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மனித உரிமை தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!