பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்

பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி;  ஒருவர் படுகாயம்
X
சேதமடைந்த வீடு. 
பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.

பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் வைத்திலிங்கம்; இவரது மனைவி ராமாயி (47), கலியபெருமாள் மனைவி கற்பகம் (54), மற்றும் இவரது உறவினர் பூவாயி ஆகிய மூவரும், அப்பகுதியில் உள்ள மாட்டுப்பட்டியை கடையாக மாற்றுவதற்காக ஒரு பகுதியில், கப்பி மண்ணை கொட்டி நிரப்பி வைத்து விட்டு அசந்து சுவற்றின் அருகே உட்கார்ந்து இருந்தனர்.

அப்போது, பலமில்லாத ஹலோ பிளாக் சுவர், மூவரின் மீது, இடிந்து விழுந்தது. இதில் ராமாயி, கற்பகம் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். பூவாயி, பலத்த காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!