பெரம்பலூர்: இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா துவக்கி வைத்தார்.
இல்லம் தேடிக் கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொதுமக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், தன்னார்வலர்களிடத்திலும் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் மற்றும் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 40 இடங்களிலும், வேப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 40 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 80 இடங்களில் 04.12.2021 வரை தொடர்ந்து இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை பயணம் நிகழ்ச்சி நடத்தி, இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சி. ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை) ஆர். அறிவழகன், உதவி திட்ட அலுவலர் பொ. ராஜா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பி. ஜெகந்நாதன்,கே. சண்முகம், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளங்கோவன், சாத்தப்பன்,ஜோதிலட்சுமி, அன்பழகன்(பொ), இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu