மது போதையில் தலைமை காவலர் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலைக்கு முயற்சி

மது போதையில் தலைமை காவலர் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலைக்கு முயற்சி
X

தற்கொலைக்கு முயற்சித்த தலைமை காவலர்

பெரம்பலூர் அருகே தலைமை காவலர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக மது போதையில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலைக்கு முயற்சி

பெரம்பலூர் அருகே அரும்பாவூர் காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ்(50).இவரின் மனைவி மாலதி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட, மகள் சுபாஷினி( 21),மகன் கருணாகரன் (16) ஆகியோருடன் கவுள்பாளையம் காவலர் குடியிருப்பில் வசித்துவருகிறார்.

இந்நிலையில் தலைமைக்காவலர் செல்வராஜ் மதுபோதையில் இருந்ததாகவும் மகன் கருணாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த மகன் கருணாகரன் இனி வீட்டிற்கு வர மாட்டேன் என கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்,

இதனால் மனமுடைந்த தலைமைக்காவலர் செல்வராஜ் வீட்டின் பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் வேஷ்டியால் தூக்கு மாட்டி கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது மகள் கூச்சலிடவே பக்கத்தில் உள்ளவர்கள் செல்வராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் காவலர் குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!