பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 141 மனுக்கள்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கட் கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்து வந்தும் மனுக்களை அளித்தனர்.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 141 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கயற்கண்ணி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி.) எஸ்.சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu