பெரம்பலூரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில், பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பலூர் நகரில் உள்ள சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்களுடன் கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளிக்குழந்தைகளை பாதுகாப்பதில் தலைமை ஆசிரியர்களின் கடமை மிகவும் இன்றியமையாதது ஆகும். தங்களது பள்ளி அமைந்துள்ள பகுதியின் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, கஞ்சா, புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்தால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அதற்கான கட்டணமில்லாத தொலைபேசி எண் 1098 மற்றும் 181 ஆகிய எண்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தற்சமயம் பள்ளி குழந்தைகள் படிப்பிற்காக அதிகமாக இணைய தளத்தினை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், இணைய தள குற்றங்கள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், இணைய தளத்தில் ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டால் மாவட்ட தலைநகரில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கலா மற்றும் அவரது குழுவினர்கள் சைபர் கிரைம் காவல்துறையினர் சிறப்பாக நடத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu