பெரம்பலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
பெரம்பலூர் அரசு மாதிரி பள்ளியில் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு நடத்தினார்.
பெரம்பலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் நடைபெறுவதையும் மற்றும் சூப்பர் 30 வகுப்புகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைகளின் எண்ணிக்கை, பள்ளி வளாகம், வகுப்பறை, கழிவறை, தண்ணீர் தொட்டி, ஆகியவை சுத்தம் செய்யப்பட்டுள்ளதையும், கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், சத்துணவு சமைக்கும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, கை கழுவும் இடம், பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சோப்பு போட்டு கைகழுவும் வசதி, பள்ளிக்கு நுழையும் முன் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்க்கவும், மாணவ,மாணவிகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதையும் கலெக்டர் அப்போது ஆய்வு செய்தார்.
மேலும் மாணவ,மாணவிகள் முக கவசம் அணிந்துள்ளதையும், ஆய்வகம் மற்றும் காத்திருப்பு அறையில் சமூக இடைவெளிவிட்டு அமரும் வகையிலும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளவர்கள் விவரங்களையும் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட சுகாதார அலுவலர், ஆரம்ப சுகாதார அலுவலர், கிராம செவிலியர், ஆம்புலன்ஸ், காவல் அலுவலர் ஆகியோர் அலைபேசி எண்கள் அடங்கிய விவரங்கள் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளதையும், மேலும் பள்ளி மாணவ,மாணவிகள் கொரோனா தடுப்பூசிகளின் குறித்த நன்மைகளை தங்களது பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர், சூப்பர் 30 ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu