ஜி.கே. வாசன் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு

ஜி.கே. வாசன் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு
X

பெரம்பலூர் அருகே ஜி.கே. வாசன் பிறந்த நாளையொட்டி வெள்ளித்தேர் இழுக்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே ஜி.கே. வாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான ஜி. கே.வாசன் 57வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட துணைத் தலைவருமான என்.ஜெயராமன் தலைமையில் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவ்விழாவில் ஜி.கே. வாசன் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தொடர்ந்து வெள்ளித் தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டார பொதுச் செயலாளர் மருத துரை,வட்டாரத் தலைவர் சித்தார்த்தன்,வட்டார துணைத் தலைவர் சஞ்சீவ் குமார்,வேப்பூர் தெற்கு வட்டார தலைவர் திருமூர்த்தி உள்ளிட்ட த.மா.கா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!