பெரம்பலூரில் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அன்னதானம்

பெரம்பலூரில் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அன்னதானம்
X

மலையப்ப நகரில் வாசன் பிறந்த நாளை முன்னிட்டு,  உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் 57வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூரில் தமாகாவினர் மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டம் காரை மலையப்ப நகரில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் 57 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 57 கிலோ கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள 150 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் கிருஷ்ன ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை.ஆர். சுப்பிரமணியன், விழாவிற்கு இந்த விழாவை ஏற்பாடு செய்து தொடங்கி வைத்தார்.

மாநில ஆசிரியர் பிரிவு இணை அமைப்பாளர் நடேச சுப்ரமணியன், மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், வேப்பூர் வட்டார தலைவர் இளவரசன், வேப்பந்தட்டை வட்டார தலைவர் ராமச்சந்திரன், மூப்பனார் நற்பணி மன்றம் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி தலைவர் இளையராஜா, மலையப்ப நகர் சரன்ராஜ்,விஜி,சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!