பெரம்பலூரில் திருமலை நாயக்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூரில் திருமலை நாயக்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
X

பெரம்பலூரில் திருமலை நாயக்கர் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பெரம்பலூரில் திருமலை நாயக்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் உள்ள தம்பி நகர் பகுதியில் இயங்கிவரும் திருமலை நாயக்கர் இராணி மங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் மதுரையைஆண்ட மாவீரன், மாமன்னர் திருமலை நாயக்கரின் 439 வது ஜெயந்தி விழா நடைபெற்றது.

அறக்கட்டளையின் மாவட்ட தலைவர் புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருமலை நாயக்கரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, திருமலை நாயக்கர் வரலாறு மற்றும் அவரது பெருமையை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது தமிழக நாயுடு கூட்டமைப்பின் பொறுப்பாளர் ரெங்கராஜ், அறக்கட்டளை மாவட்ட செயலாளர் பெருமாள் அறக்கட்டளை மாவட்ட துணைத்தலைவர், சூரியகுமார், துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் பூக்கடை பெருமல் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!