குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
X

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அருகே உள்ள நெடுவாசல் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.அதே போல் பாதாளசாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அங்கேதான் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் நெடுவாசல் கிராம மக்கள் தங்கள் பகுதியில் குப்பையை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாகவும் அதனால் நிலத்தடி நீரின் தன்மை மாறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!