முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
X

 கருணாநிதியின் 3 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆலத்தூர் மேற்கு ஒன்றியம்,பாடாலூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று பாடாலூரில் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

முன்னால் முதலைமைச்சர் கருணாநிதியின் 3 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆலத்தூர் மேற்கு ஒன்றியம்,பாடாலூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமு. மதியழகன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் - மாவட்ட கழக செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான குன்னம் சி.இராஜேந்திரன் ஆகியோர் இந்த முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்கள்.

இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் பலவேறு கிராமங்களில் முன்னால் முதலைமைச்சர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!