பெரம்பலூர்: துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை தடய அறிவியல் நிபுணர் ஆய்வு

பெரம்பலூர்: துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை தடய அறிவியல் நிபுணர் ஆய்வு
X

பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டை தடய அறிவியல் நிபுணர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டுபாய்ந்த வீட்டை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் அருகே மருதடி ஈச்சங்காடு கிராமத்தில் விவசாயி சுப்ரமணி என்பவரது வீட்டின் மேற்கூரை துளைத்த இரண்டு துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரு குண்டும் இன்று ஒரு குண்டும் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பான மாவட்ட காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.அருகில் உள்ள துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்தில் கடந்த பயிற்சி பெற்ற ரயில்வே போலீசாரிடம் விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் திருச்சி தடயஅறிவியல் துறை நிபுணர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்துவருகிறார்.

குண்டுபாய்ந்ததால் ஏற்பட்ட துளையின் அளவுகள் போன்றவற்றை அவர் தற்போது சேகரித்து வருகிறார்.இதனிடையே இன்று கைப்பற்றப்பட்ட குண்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு பாய்ந்தது என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!