பெரம்பலூர் அருகே ரூ.53 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

பெரம்பலூர் அருகே ரூ.53 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அதிகாரிகள் உள்ளனர்.

பெரம்பலூர் அருகே ரூ.53 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி 15 பறக்கும் படைகள் அமைத்து வாகனசோதணை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி பெரம்பலூர் அருகே பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தனிவட்டாட்சியர் பழனிச்செல்வன் தலைமைலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே பெரம்பலூரிலிருந்து குரும்பலூர் நோக்கி ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுத்துச்செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதணை செய்தனர்.அதில் உரிய ஆவணமின்றி 53 லட்சரூபாய் இருப்பதை கண்ட பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்தனர்.பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தி பணத்தை குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்சியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!