பெரம்பலூர் வெள்ளாற்றில் சிக்கிய குரங்கு தீயணைப்பு துறையினரால் மீட்பு

பெரம்பலூர் வெள்ளாற்றில் சிக்கிய குரங்கு தீயணைப்பு துறையினரால் மீட்பு
X

பெரம்பலூர் அருகே வெள்ளாற்று வெள்ளத்தில் சிக்கிய குரங்கு உயிருடன் மீட்கப்பட்டது.

பெரம்பலூர் வெள்ளாற்றில் சிக்கிய குரங்கு தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சு. ஆடுதுறை கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் தற்போது அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது .அந்த ஆற்றின் நடு பகுதியில் உள்ள கருவேல மரத்தில் குரங்கு ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றது என வேப்பூர் தீயணைப்பு நிலையாதிற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே நிலைய அலுவலர் செந்தில்குமார் ,தலமையில் தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றின் உதவியுடன் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று போராடி குரங்கை உயிருடன் மீட்டு வனபகுதியில் விட்டனர் .

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil