பெரம்பலூர்: 15 வருடங்களுக்கு பிறகு நிறைந்த ஏரியால் மக்கள் மகிழ்ச்சி

பெரம்பலூர்: 15 வருடங்களுக்கு பிறகு நிறைந்த ஏரியால் மக்கள் மகிழ்ச்சி
X

பெரம்பலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய ஏரி நீருக்கு மக்கள் பூ  தூவி வரவேற்பு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 15 வருடங்களுக்கு பிறகு நிறைந்த ஏரியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் இம்மாவட்டத்தில் உள்ள 78 ஏரிகளில் 69 ஏரிகள் நிரம்பி வருகின்றன.கிராம மற்றும் நகர்புற ஏரிகள் நிரம்பி வழியும் நீரை ஊர் முக்கியஸ்தர்கள், விவசாயிகள், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் அவரது பகுதிகளில் வரவேற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை ஊராட்சிக்குட்பட்ட பெரிய ஏரி 15ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிறைந்து நிரம்பி கடை ஓடிய நீரை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துக்குமார் ,ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வராணி செல்லதுரை ,ஒன்றிய கவுன்சிலர் தேவகி நடராஜ் ,ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராமத்திலுள்ள பொதுமக்கள் இளைஞர்கள் மலர்தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு 7 வருடங்களுக்கு தண்ணீர் பஞ்சம் வராது என்று நம்பிக்கை தெரிவித்தனர் கிராம மக்கள்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு