பேச்சுவார்த்தையின் போது சண்டை: இடுப்பு பெல்ட்டை கழட்டி விசிறிவிட்ட போலீசார்..!
பெரம்பலூர் நகரில்ரோவர் வளைவு பகுதியில் இருந்து எளம்பலூர் சாலை வரை செல்லும் பிரதான சாலையில் பாரதிதாசன் நகர் மற்றும் முத்துநகர் ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களிலும் சாலைகளில், நடுவிலும் இளைஞர்கள் கூட்டமாக கூடி ஒன்றுசேர்ந்து பேசும் இடமாக அங்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜூன் 16-ம் தேதியன்று சாலையிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்த சில இளைஞர்களிடம் அப்பகுதியில் வந்த காய்கறி விற்பனை செய்யும் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்த சொல்லி நகரும் படி கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதை அலட்சியப்படுத்திய இளைஞர்கள் ஏதும் கண்டு கொள்ளாமல் இருக்க இக்கட்டான இடத்தில் ஆட்டோவை ஓட்டியதில் இளைஞர்களின் மீது உரசுவது போல் வாகனம் சென்றதால் அந்த வண்டியின் ஓட்டுநர் மற்றும் விற்பனையாளரை இளைஞர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பான ஆட்டோ ஓட்டுனர் தனது வாகனத்தில் இருந்தவர்கள், இளைஞர்கள் அவர்களது நண்பர்களின் அழைத்ததால் இரு தரப்பினரும் அங்கு கூடவே அங்கு பெரும் பரபரப்புடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியது. இது தகவலறிந்த போலீசார் ஒருவர் மட்டும் சம்பவ இடத்திற்கு சென்றார்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டுள்ளனர்.
போலீசார் முன்னிலையில் நடைபெற்ற சம்பவத்தில் கட்டுக்கடங்காத இளைஞர்களை, போலீசார் தனது இடுப்பு பெல்ட்டை கழட்டி வெளுத்து வாங்கினார். இதில் அங்கிருந்த ஒரு சிலர் ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து, பேசும்போதே நான் சொல்லியும் கேட்காமல் அடிதடியில் ஈடுபடுகிறீர்கள். என அங்கிருந்தவர்களை சத்தம் போட்டு போலீசார் அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தார்.
மேலும் இதுபற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள் தினந்தோறும் இங்கு வந்து பகல் மற்றும் இரவு நேரத்தில் கூடிப் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாக உள்ளது, இவர்கள் கூடியிருக்கும் தோரணை என்பது அப்பகுதியில் செல்லும் பெண்கள், சிறுவர்கள், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, ஊரடங்கு நேரத்திலும் இதுபோன்ற இவர்கள் பொது இடங்களில் கூடி இருப்பது மிகுந்த வருத்தத்தையும் அளிக்கிறது எனவே போலீசார் தினமும் இப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இவர்கள் அங்கு கூடாமல், இடையூறின்றி பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu