வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகள் அரை ஆடை போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகள்  அரை ஆடை போராட்டம்
X

வேளான் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பெரம்பலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் சார்பில் விவசாயிகள் அரை ஆடை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் சார்பில் விவசாயிகள் அரை ஆடை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் சார்பில் விவசாயிகள் அரையாடை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மகாத்மா காந்தி மதுரையில் விவசாயிகளின் அவல நிலையை கண்டு அரை ஆடை உடுத்தினார். செப்டம்பர் 22 ஆம் தேதியான இன்று, மத்திய பாஜக அரசின் 3 வேளாண் விரோத சட்டங்கள் மூலம், விவசாயிகள் உடுத்திருக்க கூடிய ஆடையை மோடி உருவ முயற்சிக்கிறார், என்பதை எடுத்துக்காட்டும் விதத்திலும், மேலும் இதை கண்டிக்கும் விதத்திலும் மத்திய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் விவசாயிகள் மேலாடையின்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தலைவர் சித்தர், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், தமிழக விவசாய அணி மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஏ.கே ராஜேந்திரன் ஆகியோர் அரை ஆடை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொறுப்பாளர் சீனிவாசராவ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai tools for education