பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
X
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராடினர்.
பெரம்பலூரில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மழையால் பாதிக்கப்பட்ட காப்பீடு செய்த பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயிலுர், குடிக்காடு, வரகுபாடி,சிறுகன்பூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நவ.15 ம் தேதியான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இதில் கடந்த 2019-20 ஆண்டுகளுக்கு பயிர் காப்பீடு செய்து அதற்கான பிரிமீயம் தொகை செலுத்தி உள்ளோம். மேலும் பிரிமீயம் தொகை செலுத்தியதற்கான ஒப்புகை சீட்டு பெற்றுள்ளோம். தற்போது தமிழகம் முழுவதும் சேதம் அடைந்த காப்பீடு செய்த பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேப் போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

பெரம்பலூர் ஆலத்தூர் ஒன்றியத்தில் இதுவரை சேதமடைந்த பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்கவில்லை.ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோரிக்கை மனு தொடர்பாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தற்போது பெய்த வரும் தொடர் மழையாலும், படைப்புழுக்களாலும் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு