பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
X
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்து கிடந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி கிராமம் இந்திரா காந்தி நகரில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன் மகன் ரவிச்சந்திரன். இவரது தந்தை சுந்தரராஜன் முன்னாள் ராணுவ வீரர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பெரம்பலூரில் தங்கியிருந்த தனக்கு வரும் ஓய்வூதிய தொகையை வைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அதிக அளவு மது அருந்தியதால் சுந்தரராஜன் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா