பெரம்பலூரில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ரெட் கிராஸ் மூலம் கம்பளி ஆடை

பெரம்பலூரில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ரெட் கிராஸ் மூலம் கம்பளி ஆடை
X

பெரம்பலூரில் முதியோர்களுக்கு ரெட்கிராஸ் சொசைட்டி மூலமாக கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ரெட் கிராஸ் சொசைட்டி மூலம் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே 4 ரோடு முத்துலெட்சுமி நகரில் முதுயுகம் முதியோர் இல்லம் உள்ளது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக இந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர்கள் குளிரில் சிரமப்படுவார் என முதியோர்களின் நலன்கள் கருதி ஒய்வு பெற்ற கல்வி அதிகாரியும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை கௌரவ செயலாளருமான ஜெயராமன் முன்னிலையில் உதவிகள் வழங்கப்பட்டது.

எசனை முருகேசன்- சௌமியா,பெரம்பலூர் செந்தில்-ரம்யா,பெரம்பலூர் மோகன்-சாரதா,பெரம்பலூர் அரிமா ராஜேஸ்-தேவி, கவுள்பாளையம் வெங்கடேசன்-சாந்தி,பெரம்பலூர் பார்த்திபன்- காயத்திரி ,பெரம்பலூர் மணி-கோமதி ஆகியோர் சார்பில் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் உதிரம் நாகராஜ் உட்பட முதியோர் இல்ல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai healthcare technology