குன்னம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை

குன்னம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை
X
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட புஜங்க ராயநல்லூர் கிராமத்தை அடுத்த மாக்காய் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து.மரம் வியாபாரி . இவரது வீட்டில் தங்கி மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட வந்த அரியலூர் மாவட்டம், உல்லியக்குடி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் இடையே நேற்று இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், காசிநாதன்(70), என்ற முதியவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உல்லிய குடி கிராமத்தை சேர்ந்த சிங்காரம்(60), என்பவரை கைது செய்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!