பெரம்பலூர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக பூஜை

பெரம்பலூர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்  108 சங்காபிஷேக பூஜை
X

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 108  சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,செட்டிகுளத்தில் அமைந்துள்ளது காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்.குபேர பரிகார ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் சோமாவார திங்கட்கிழமையையொட்டி கலசங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கணபதி ஹோமத்தோடு யாக வேள்வி பூஜையும், தொடர்ந்து பூர்ணாஹுதியும் நடைபெற்றது.

அதனையடுத்து 108 வலம்புரி சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சங்குகளில் நிரப்பபட்ட புனித நீர் மூலவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு,மலர் அலங்காரத்தோடு மஹா தீபாராதனை நடைபெற்றது.

இந்த 108 சங்காபிஷேக பூஜை விழாவில் செட்டிகுளம், நாட்டார் மங்கலம்,பெரகம்பி,மாவிலிங்கை,குரூர்,சிறுவயலூர்,பொம்மனப்பாடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் வழிபட்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை செயலர் அலுவலர் ஜெயலதா,எழுத்தர் தண்டாணிதேசிகன் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்