பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு

பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு
X

துரைமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பத்தாவது மாவட்ட மாநாடு, பெரம்பலூர் அடுத்துள்ள துறை மங்கலத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தை உருவாக்க வேண்டும், பெரம்பலூரில் அரசு வேளாண் கல்லூரி துவக்க வேண்டும்;, வேப்பந்தட்டை 60 ஆண்டு கனவு திட்டமான சின்னமூட்டு நீர் தேக்கத்தை துவங்கவேண்டும்; ஆலத்தூர் பகுதியில் மருதையாற்று அணைக்கட்டு திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் சிங்காரவேலன் தலைமை உரை ஆற்றியனார். மாநிலச் செயலாளர் பாலா, மாநில செயற்குழு லெனின், மாநிலச் செயலாளர் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் கருணாகரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட அமைப்புக் குழு அறிவழகன், வட்டக் குழு சக்திவேல், பொறுப்பாளர்கள் முருகேசன், அருண், சந்துரு, வேல்முருகன், சதீஷ்குமார், பெரியசாமி, பாஸ்கரன், ராமுசோமு, துரை, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!