பெரம்பலூர்: குடிபோதை தகராறில் முதியவர் பாட்டிலால் குத்திக்கொலை

பெரம்பலூர்: குடிபோதை தகராறில் முதியவர்  பாட்டிலால் குத்திக்கொலை
X
பெரம்பலூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது.75). மனைவி குழந்தைகள் இல்லை, பக்கவாத நோயாளி. நேற்று இரவு இவருக்கும் இதே ஊரை சேர்ந்த நாகப்பனுக்கும் (வயது 45) இடையேகுடிபோதையில் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நாகப்பன் கத்தியால் வெட்டியதில் மணிக்கு கழுத்தின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார், தகவலறிந்த பாடாலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு வைத்தனர்.

மேலும் நாகப்பனை கைது செய்து பாடாலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story