குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் மாவட்டம் நன்னை கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.அதில் நன்னை கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில், உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சாம்பான் குளம், இருந்தது. தற்போது அந்த சாம்பான் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு காணாமல் போய் வீடுகளாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் அரசுத் துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆகவே நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியாக அனுமதி பெற்றோம். சென்னை உயர்நீதிமன்றம் அரசு அலுவலர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தும், இதுநாள்வரை ஆக்கிரமிப்புகளை எடுக்காமல் உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு சொந்தமான சாம்பான் குளத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்கள் குளத்தில் நாங்கள் தண்ணீர் எடுப்பதற்கு ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu