பெரம்பலூரில் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

பெரம்பலூரில் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
X

பெரம்பலூரில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. 

பெரம்பலூரில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது .

பெரம்பலூர் திமுக அலுவலகத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பிரபாகரன் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான ராசா எம்.பி. கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

பெரம்பலூர் நகராட்சியில் தினமும் தடையற்ற காவிரி குடிநீர் பெற்றுத்தர 320 கோடி புதிய திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அத்திட்டத்தின் நிறைவேற்றப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, வருகின்ற சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே வந்து சேரும் என்றார்.

இகூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி இந்தியத் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!