பெரம்பலூரில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்கமணி பேசினார்.
தே.மு.தி.க. கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த துரை.காமராஜ் மற்றும் பொறுப்பாளராக இருந்த கண்ணுசாமி இரண்டு பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தனர், இதனால் பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. கட்சி மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு, தற்காலிகமாக திருச்சியை சேர்ந்த தங்கமணி பொறுப்பாளராக கட்சி தலைமையிடத்தில் இருந்து அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தங்கமணி மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டால் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என தங்கமணி அறிவித்தார்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர்கள் சுரேஷ், சுடர்செல்வன், ராஜேந்திரன், சங்கர்,அரியலூர் மாவட்ட செயலாளர் ஜெயவேல், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவா ஐயப்பன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, நகர செயலாளர் ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், விஜயகுமார், செந்தில்குமார், உள்ளிட்ட பேரூராட்சி, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu