பெரம்பலூர்: ஆலத்தூர் ஒன்றிய தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம்

பெரம்பலூர்: ஆலத்தூர் ஒன்றிய தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தே.மு.தி.க. கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு படிவம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார் மங்கலம் கிராமத்தில் தே.மு.தி.க. ஆலத்தூர் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளாருமான கொ.தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

இந்நிகழ்வில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஆனந்த் ராஜ்,மாநில மாற்றுத்திறனாளி அணி துணை செயலாளர் செந்தில்குமார்,மாவட்ட துணைச் செயலாளர் சுடர் செல்வன், ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்.சாமிதுரைவேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவா. ஐய்யப்பன் மற்றும் தேமுதிக ஒன்றிய, கிளை , மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன்பாக பெரம்பலூர் நகர் மன்றத் தேர்தலுக்கு தே.மு.தி.க. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கமணி விருப்ப மனு படிவத்தை வழங்கினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு