பெரம்பலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடிச்சேர்க்கை

பெரம்பலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடிச்சேர்க்கை
X

பெரம்பலூர் ஐ.டி.ஐ. யில் கல்வி பயிலும் மாணவர்கள் (பைல்படம்).

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடிச்சேர்க்கைக்கான காலக்கெடு 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை இணையவழியில் நடைபெற்றது. எனினும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் ஆகிய இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளது.

எனவே இ நேரடி சேர்க்கை 15.01.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நேரடிச் சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர்) நேரடியாக அணுகி காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

மேலும் ஏதேனும் விபரங்களுக்கு முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் (04328-296644, 94990 55882) அவர்களையும், முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் (94990 55853) அவர்களையும் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை கேட்டறிந்து பயன்பெறலாம் என பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!