உண்டு உறைவிடப்பள்ளி நரிக்குறவர் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை

உண்டு உறைவிடப்பள்ளி நரிக்குறவர் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை
X

பெரம்பலூர் மாவட்டத்தில் நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் மலைக்கிராமம் உண்டு உறைவிடப்பள்ளி நரிக்குறவர் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள மலையப்ப நகர் கிராமத்தில் நரிக்குறவர்கள் குழந்தைகளுக்காக இயங்கி வரும் ராமலிங்கம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சுப்பிரமணியம் அனைவருக்கும் இலவசமாக தீபாவளி புத்தாடை வழங்கினார்.

அனைத்து மாணவிகளையும் ஜவுளி கடைக்கு நேரடியாக அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த அளவு மற்றும் கலர் டிசைன்களை பார்த்து வாங்கி வந்து பிறகு பள்ளி வளாகத்தில் வைத்து அனைவருக்கும் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது பள்ளி தலைமையாசிரியர் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!