பெரம்பலூரில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்த 1993-ம் பேட்ச் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து ராஜேந்திரன் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள்-1993-ம் பேட்ச் சார்பாக ரூபாய் 7,27,500/- சேகரித்து அதனை பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி தலைமையில் ராஜேந்திரன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ,காவல் ஆய்வாளர் மற்றும் 1993-பேட்ச் காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டார்கள். மேலும் உதவி தொகை செய்த 1993-பேட்ச் காவல்துறையினரின் சேவை மனப்பான்மையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதுடன், தமிழகம் முழுவதும் உள்ள 1993-பேட்ச் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu