பெரம்பலூர் அருகே தி.மு.க. பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

பெரம்பலூர் அருகே தி.மு.க. பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்
X
பெரம்பலூர் அருகே பூலாம்பாடி தி.மு.க. பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேருராட்சி தலைவராக இருப்பவர் பாக்யலட்சுமி. (தி.மு.க) இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் கடம்பூர் கிராமம் உள்ளது. கடம்பூர் கிராமத்தில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே தனியார் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,அதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கடம்பூரை சேர்ந்த 3 பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமியை அவரது வீட்டிற்கே சென்று திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கடம்பூரில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே வீடுகள் கட்ட மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.அரசு விதிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதால் மேற்கண்ட மனைப்பிரிவிற்கு அனுமதிதரவில்லை.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன், தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய 3 பேர் எனது வீட்டிற்கு கம்பு, கல் ஆகியவற்றுடன் வந்து என்னை ஜாதியை சொல்லி திட்டி, தகாதவார்த்தைகளால் அசிங்கமாக பேசினர்.

ஜாதியை சொல்லி திட்டாதீர்கள் என கூறிய என் கணவர் செங்குட்டுவனையும் தாக்க முயன்றனர். நாளைக்குள் மனைப்பிரிவிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். எனவே ஜாதிபெயரை சொல்லி அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்த மூன்றுபேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!