பெரம்பலூரில் சைபர் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
பெரம்பலூரில் சைபர் குற்றங்கள் பற்றி போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுறுத்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வழிகாட்டுதல்படியும், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணி மேற்பார்வையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கலா மற்றும் உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர்கள் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏ.டி.எம். கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏ.டி.எம். கார்டு கடவுச் சொல் மற்றும் ஓ.டி.பி. எண் ஆகியவற்றை பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்வது குறித்தும், ஆன்லைன் வர்த்தகம் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 155260 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu