சைபர் கிரைம்- விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் போலீசார்
சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பெரம்பலூர் போலீசார் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணி மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட ஊர்காவல்படை அலுவலகத்தில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கலா மற்றும் அவரது குழுவினர் இணைந்து, ஊர்காவல்படையில் பணிபுரியும் ஆளிநர்களுக்கு, விழிப்புணர்வு அளித்தனர்.
அதன்படி, இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது. ஏடிஎம் கார்டு மற்றும் ஒடிபி எண் பகிரக்கூடாது, வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது, வேலை வாங்கித்தருவது, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது போன்ற குறுஞ்செய்தி, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டியதன் அவசியம், ஆன்லைன் விளையாட்டு. ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
மேலும், இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால், சைபர் கிரைம் உதவி எண் 155260 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu