பெரம்பலூர்:மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருந்த கள்ள சாராயம் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளசாராயம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நபருடன் போலீசார் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) தலைமையில் மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக சாராயம் காய்ச்சும், வைத்திருக்கும், விற்கும் செயல்களுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான குழு சோதனை செய்து கொண்டிருந்த போது சில்லக்குடி மேத்தால், காட்டுக்கொட்டகையை சேர்ந்த துரைசாமி மகன் செல்லமுத்து என்பவர் சட்டத்திற்கு விரோதமாக நாட்டு சாராயம் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி துரிதமாக செயல்பட்டு மேற்படி நபரின் வீட்டிற்கு சென்று மதுவிலக்கு சோதனையிட்டதில் அவர் வீட்டின் அருகே மாட்டு சாணம் கொட்டும் இடத்தில் மறைத்து வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று டயர் டியூப்பில் நிரப்பப்பட்ட சுமார் 100 லிட்டர் நாட்டு சாராயத்தை கைப்பற்றினர்.
பின்னர் மேற்படி நபரை கைது செய்து அந்த சாராய ஊறலை அதே இடத்தில் அழித்துவிட்டு, அவர் நாட்டு சாராயம் கொண்டு செல்ல வைத்திருந்த காரை பறிமுதல் செய்தனர்.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தமிழரசி, தலைமைக் காவலர்கள் சாமிநாதன், ஜெர்மியாஸ் ஆரோக்கியதாஸ் மற்றும் சி.ஐ.யு. பிரிவைச் சேர்ந்த தலைமை காவலர் திலிப்குமார் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி பபாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu