பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்த நபர் கைது
X

கள்ளசாராயம் விற்றவரை  பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின் படி, சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ள சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பில்லங்குளம் -புளியங்குறிச்சி ரோடு வேல்முருகன் என்பவரின் காடு அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த பில்லங்குளத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர்,கைது செய்தனர்.

அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 8 லிட்டர் மதிப்பிலான 40 பாக்கெட் சாராயத்தை கைப்பற்றியும், பின்னர் சாராயத்தை விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil