பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
X
தற்போது இரண்டு ஊசிகளும் போட்டு முடித்து ஒன்பது மாதங்கள் ஆன நபர்களுக்கு கூடுதல் தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரனோ பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில், தற்போது இரண்டு ஊசிகளும் போட்டு முடித்து ஒன்பது மாதங்கள் ஆன நபர்களுக்கு கூடுதல் தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை துவங்கி உள்ளது. இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமில், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா துவக்கி வைத்தார், இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் போட்டு முடிந்து 9 மாதங்கள் ஆன அனைவரும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!