பெரம்பலூரில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பெரம்பலூரில் கொரோனா  தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர்  ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 8ம் கட்டமாக இன்று நடைபெற்றது . மாவட்டத்தில், 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 157 இடங்களில் சிறப்பு முகாம்கள் என 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன.

மாவட்டத்தில் இதற்கென பெரம்பலூர் வட்டாரத்தில் 45 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 48 தடுப்பூசி மையங்களும், ஆலத்தூர் வட்டாரத்தில் 46 தடுப்பூசி மையங்களும், குன்னம் வட்டாரத்தில் 51 தடுப்பூசி மையங்களும் என மொத்தம் 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் , நடைபெற்ற மெகா கொரானா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உடன் இருந்தார்,

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்

18 வயதிற்கு மேற்பட்ட, கொரோனா தடுப்பூசி போடாத அனைவரும் மறக்காமல், மறுக்காமல் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, நமது பெரம்பலூர் மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!