குரும்பலூர் பேரூராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார்

குரும்பலூர் பேரூராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார்
X

வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சுயேச்சை வேட்பாளர் படத்துடன் கூடிய அட்டை.

குரும்பலூர் பேரூராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி 14 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ரம்யா போட்டியிடுகிறார். தனது ஆதரவாளர்களுக்கு ஓட்டுக்கு நோட்டு என்று பணத்தை கொடுத்து வந்துள்ளனர். தகவல் அறிந்த பறக்கும் படையினர் துணை தாசில்தார் தங்கராசு தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குக்காக பணம் கொடுத்த நபரை பிடிக்க முயன்ற பொழுது இரு சக்கர வாகனத்தை சம்பவ இடத்தில் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இருசக்கர வாகனத்தில் கைப்பற்றி சோதனையிட்டபோது 50 கவர்களில் தலா ரூபாய் 200 வீதம் மொத்தம் பணம் பத்தாயிரம் இருப்பதை உறுதிப்படுத்தினர். மேலும் சுயேட்சை வேட்பாளர் ரம்யா புகைப்படம் ஒட்டப்பட்ட அட்டைகளும் சின்னங்களும் வாகனத்திலிருந்து பறக்கும் படையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்