பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி குழந்தை பெற்றெடுத்ததால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி குழந்தை பெற்றெடுத்ததால் பரபரப்பு
X

போலீசார் மீட்டெடுத்த குழந்தை.

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி குழந்தை பெற்றெடுத்ததால் பரபரப்பு

பெரம்பலூர் எசனை கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி அவரது தாயுடன் ஊட்டி எஸ்டேட் ஒன்றில் தங்கி கல்லூரி இறுதியாண்டு(பி.ஏ. ஹிஸ்டரி) பயின்றுவந்ததுள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் குடியிருக்கும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காயத்ரி கர்ப்பமாக இருந்துள்ளார். தான் கர்ப்பமாக இருந்ததை யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். நாளடைவில் வயிறு பெரியதாக இருக்கும் போது தாய் என்னவென்று கேட்க தனக்கு வயிற்றுவலி இருப்பதாகவும் வயிறு சரியில்லை என்று கூறியுள்ளார். இதன்பின்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊரான எசனை கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் இயற்கை உபாதைக்கு செல்வதாக கூறி அருகே உள்ள மலைக்குன்றின் பாதையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். நெடுநேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த தாய் அங்கு சென்று பார்த்த பொழுது குழந்தை பிறந்து இருப்பது தெரியவந்தது. குழந்தை

இறந்துவிட்டதாக கருதி குழந்தையை அங்கேயே போட்டு விட்டு வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால் மாணவிக்கு இரத்தப்போக்கு நிற்க்காமல் இருக்கவும் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர் குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் தான் ஆகியிருக்கும் என சந்தேகப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பெரம்பலூர் போலீசார் கல்லூரி மாணவியின் தாயாரை அழைத்துக்கொண்டு குழந்தை பிறந்த சம்பவ இடத்திற்கு செல்லும் பொழுது அங்கு குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. உடனே குழந்தையை மீட்டு அதிகாலை 02.00 மணிக்கு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது தாய்,சேய் இருவரும் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருமணமாகாத கல்லூரிமாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story