பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம்
பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரார்த்தனை கூடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 11.45 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலில் ஏசு கிறிஸ்து பிறப்பின் மேன்மைகளை கூறும் பாடல்கள் இசைக்கப்பட்டன.
உலகில் சமத்துவம், சகோதரத்துவத்திற்காக ஏசு கிறிஸ்து ஆற்றிய நற்செயல்கள் குறித்து விளக்கப்பட்டது. பின்பு திருப்பலி நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை பங்கு குரு ராஜமாணிக்கம் தலைமை தாங்கி, கிறிஸ்துமஸ் குடிலை திறந்துவைத்து சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையம் , வாலிகண்டபுரம், பெரம்பலூர் டி.இ.எல்.சி. தூயயோவான் ஆலயம், அன்னமங்கலம், கவுல்பாளையம், எசனை, தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், நூத்தப்பூர், திருவாலந்துறை, வடக்கலூர், எறையூர் சர்க்கரை ஆலை, திருமாந்துறை, செட்டிகுளம், பாடாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா ஒமிக்கிரான் போன்ற கிருமிகள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu